Advertisements

தேசிய ஜனநாயகக் கூட்டணி, உறுதியான வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம், வலையங்குளத்தில் பாஜக வேட்பாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மைய முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், வாக்கு எண்ணிக்கையின்போது, வாக்கு எண்ணும் மையங்களில் பணியில் உள்ள முகவர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதில், 17 தொகுதிகளைச் சேர்ந்த பாஜக வேட்பாளர்கள், வாக்கு எண்ணிக்கை தலைமை முகவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதியான வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்று கூறினார்.
தமிழகத்தின் வளர்ச்சிக்காக உழைக்கக்கூடிய, தமிழ் மக்களின் பெருமை மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாக்கக்கூடிய, பெண்களின் நலன் மற்றும் கண்ணியத்தை உறுதி செய்யக்கூடிய ஒரு அரசாங்கம் அமையும் என்று தெரிவித்தார்.
இந்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பாளர்கள், அவர்கள் தங்களது வேலையைச் செய்கின்றனர். நாங்கள் தங்கள் வேலையைச் செய்கிறோம் என்று கூறினார்.
Advertisements


