இந்தியர்கள் மீதான தாக்குதல் ஏற்க முடியாதது…..! பிரதமர் மோடி கடும் கண்டனம்…..!

Advertisements

ஐக்கிய அரபு அமீரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று இந்தியக் குடிமக்கள் காயமடைந்ததற்குப் பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில், மூன்று இந்தியக் குடிமக்களின் காயங்களுக்கு வழிவகுத்த ஐக்கிய அரபு அமீரகம் மீதான தாக்குதல்களை தான் வன்மையாககக் கண்டிப்பதாகத் தெரிவித்தார்.

பொதுமக்களையும் உள்கட்டமைப்புகளையும் குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறினார். இந்தியா, ஐக்கிய அரபு அமீரகத்துடன் உறுதியான ஆதரவைத் தெரிவிப்பதோடு, பேச்சுவார்த்தை மூலம் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அமைதியான தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகப் பாதுகாப்பான மற்றும் தடையற்ற கப்பல் போக்குவரத்தை உறுதி செய்வது  மற்றும் உலகளாவிய எரிசக்திப் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது என்றும் குறிப்பிட்டார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *