பருவநிலைகள் குளிர் காலம், பனிக்காலம், மழைக்காலம், கோடைக்காலம் என நான்கு நிலைகளையும் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
அதிலும் டெல்லியில் கோடைக்காலத்தில் அதிகப்படியான வெயிலும், குளிர் காலத்தில் அதிகப்படியான குளிரும், பனியும் சூழ்வது வாடிக்கையான ஒன்றுதான்.
நமது நாட்டின் வடமாநிலங்களில் தற்போது குளிர்காலம் நிகழ்ந்து வருவதால், அதனைத் தொடர்ந்து பனியும் பெய்ய ஆரம்பித்துள்ளது. அதிகப்படியான பனிமூட்டம் டெல்லியில் இருப்பதால் அங்குள்ள மக்கள், குறிப்பாக வாகன ஓட்டிகள் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.
குறிப்பாக, டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. வெப்பநிலை 7 டிகிரி செல்சியசாக குறைந்துள்ளதால் எதிரே வரும் வாகனங்கள் கண்களுக்கு தெரியாததால் விபத்து நிகழ்வதற்கான வாய்ப்புகள் உருவாகும் அச்சம் உள்ளது.
டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். சாலையில் முன்னே செல்லும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடியே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் விமான போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. ஓடுதளம் தெரியாத வகையில் பனிமூட்டம் இருப்பதால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு விமானங்கள் அருகில் உள்ள நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. மேலும், பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


