Kanchipuram Encounter: 2 ரவுடிகள் சுட்டுக்கொலை!

Advertisements

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற என்கவுண்டரின் போது  ரவுடிகள் தாக்கியதில் போலீசார் 2 பேர் படுகாயமடைந்தனர்.

காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் ஓட ஓட வெட்டிக் கொல்லப்பட்டார்.கொலை செய்யப்பட்டவர்  பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபாகரன் என்று கூறப்படுகிறது. இச் சம்பவம்  நேற்று  பிள்ளையார் பாளையம் பகுதியில் நிகழ்ந்தது. பழிக்குப் பழியாக நடந்த இந்த கொலையில் ஈடுபட்டவர்கள் கொலை செய்தவுடன் தப்பியோடிவிட்டனர். கொலை நடந்த இடத்திற்கு விரைந்த போலீசார் குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

கொலையைச் செய்தவர்கள் காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி வசூர் ராஜாவின் கூட்டாளிகள் ரகு மற்றும் ஹசன் என்பது தெரியவந்ததை அடுத்து போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். அப்போது காஞ்சிபுரம் ரயில் நிலையம் அருகே உள்ள இந்திராநகர் பகுதியில் ரகு மற்றும் ஹசன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு நேற்று இரவு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் விரைந்து சென்ற போலீசார் குற்றவாளிகளை பிடிக்க முயன்றனர்.

ஆனால் ரவுடிகள் சற்றும் எதிர்பாராமல் இருந்த  போலீசார் மீது அரிவாளைக் கொண்டு வெட்டி  தாக்குதல் நடத்த முற்பட்டனர்.  இந்த தாக்குதலில் சிறப்பு காவல் உதவியாளர் ராமலிங்கம், காவலர் சசிகுமார் இருவரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து, தற்காப்புக்காக போலீசார்  துப்பாக்கிச்சூடு நடத்த  தொடங்கிய போது ரவுடிகள் ரகு, அசன் இருவரும் எதிர்பாராதவிதமாக   குண்டு   இறந்தனர்.

தேடுதல் வேட்டையின் போது படுகாயமடைந்த இரண்டு போலீசார் சிகிச்சைக்காக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *