சென்னையில் அமைந்துள்ள எண்ணூரில் பெரிய குப்பம் பகுதியில் உர தொழிற்சாலை உள்ளது.
அந்த தொழிற்சாலையில் இருந்து கடலுக்கடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நள்ளிரவில் திடீரென அமோனியம் வாயு வெளியேறியுள்ளது. இவ்வாயு வெளியேறியதால் அப்பகுதி மக்களில் சிலருக்கு மூச்சுத் திணறல் போன்ற அசௌகரியங்கள் ஏற்பட்டதால் மக்கள் கடும் பத்திப்புக்குள்ளாகினர். பாதிப்புக்கு ஆளானவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமத்திக்கப்பட்டனர்.
வாயுக் கசிவால் பெரிதும் பயத்தில் உறைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து சாலைகளில் குவிந்தனர். தகவலறிந்த போலீசார் பொதுமக்களுக்கு அச்சப்படத் தேவையில்லை என்று தைரியம் கூறி பொதுமக்களை அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.
வாயுக் கசிவு குறித்து மாசுகட்டுப்பாட்டு வாரியம் நடத்திய சோதனையில் எண்ணூர் கடல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தனியார் தொழிற்சாலையின் திரவ அமோனியம் எடுத்து வரும் குழாயிலிருந்து அமோனியா வாயு கசிந்த காரணத்தால் இச் சம்பவம் நடந்ததாகக் கூறினர்.
அதாவது ஆய்வின் அறிக்கையின்படி ஆலை முகப்பில் காற்றில் 400 microgram/m3 ஆக இருக்க வேண்டிய அமோனியா, 2090 microgram/m3 ஆகவும் கடலில் 5mg/L ஆக இருக்க வேண்டிய அமோனியா 49mg/L இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் ஒப்புதலைப் பெற வலியுறுத்தி மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்கள் அமோனியம் வாயு வெளியேறிய தனியார் தொழிற்சாலையை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிற்சாலையின் நுழைவுவாயிலில் நிறுத்தப்பட்டிருந்த பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலிசாருடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பொது மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறும் போது வாயு கசிவு குறித்து தொழிற்சாலை நிறுவனம் எந்த முன் அறிவிப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. மக்களே ஒருவருக்கொருவர் கதவுகளை தட்டி வெளியே வருமாறு கூறிய பிறகே வாயு கசிவு விவரம் குறித்து தங்களுக்கு தெரிய வந்ததாக கூறினர். இதனால் தங்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கும் அபாயம் உள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
