கராத்தே மாஸ்டரின் sex அட்டாக்.. மருமகளை கர்ப்பமாக்கிய மாமனார்..!

மகன் காதலித்து திருமணம் செய்து அழைத்து வந்த மருமகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய மாமனாரை போலீசார் குடும்பத்தோடு தேடி வருகின்றனர். கன்னியாகுமாரியில் அரங்கேறியுள்ள வில்லங்க சம்பவம் குறித்து  விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு…

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்த இளம்பெண் அஜீதா, தனது இரண்டு மாத கர்ப்பத்தை,  கலைக்க வேண்டும் என்று மருத்துவர்களிடம் கேட்டுள்ளார்.எதற்காக கருவைக் கலைக்க வேண்டும் என மருத்துவர்கள் விசாரித்தபோது, இது என் கணவர் மூலம் உருவான கரு அல்ல, எனது மாமனார் மூலம் உருவான கரு என கண்ணீர்  விட்டு கதறியுள்ளார்.

இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு, மணவாளக் குறிச்சி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர்.
போலீசார் வந்து இளம்பெண் அஜீதாவிடம் விசாரித்தபோதுதான்,  மருமகளுக்கு மாமனார் செய்த பாலியல் வன்கொடுமை அம்பலமானது.
மணவாளக்குறிச்சி அருகே உள்ள ஆறான்விளை பகுதியைச் சேர்ந்தவர்தான் தான்  21 வயது அஜீதா. தாயை  இழந்து தந்தையால் கைவிடப்பட்ட அஜீதா தனது பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார்.
அங்குள்ள கல்லூரி ஒன்றிலும் படித்து வந்துள்ளார்.ஆறான்விளை அருகே உள்ள வடக்கன்பாகம் பகுதியைச் சேர்ந்தவர் 54 வயது கராத்தே மாஸ்டர் செல்வகுமார். இவருக்கு மனைவியும் மூன்று மகன்களும் உள்ளனர். செல்வகுமார் மணவாளக் குறிச்சி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் இரவுக் காவலாளியாகப் பணியாற்றி வந்துள்ளார்.இவரது இரண்டாவது மகன் ஸ்ரீவிக்னேஷ், டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கும் இளம்பெண் அஜிதாவுக்கும், ஏற்பட்ட பழக்கம் நெருக்கமாகி இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர்.
இவர்களின் காதலுக்கு பாட்டி எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய அஜீதா,
ஸ்ரீவிக்னேஷை கோயிலில் வைத்து திருமணம் செய்துவிட்டு அவரது வீட்டுக்கு சென்று குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.இரவுப் பணிக்கு செல்லும் செல்வகுமாரும், மருமகள் அஜிதாவும் பகலில் வீட்டில் இருக்க மற்றவர்கள் வேலைக்குச் சென்று வந்துள்ளனர்.இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி பகலில் வீட்டில் இருந்த அஜிதாவை, மாமனார் செல்வகுமார் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து, அஜிதா தனது கணவருக்கு தகவல் அளித்தும் அவர் நம்பாமல் மனைவியைத் திட்டியுள்ளார்.இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட, மாமனார் செல்வகுமார், இதற்குப் பின்னரும், அஜிதா மிரட்டி 7 முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.இதனால் அஜிதா 2 மாதம் கர்ப்பமான நிலையில் தனது கணவர் ஸ்ரீ விக்னேஷ் மற்றும் மாமியார் ராஜேஸ்வரியிடம் கூறியுள்ளார். அவர்களோ, இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் செல்வகுமார் அவமானத்தில் தற்கொலை செய்துகொள்வார் எனக் கூறி, இதை யாரிடமும் சொல்லக்கூடாது என அஜிதாவிடம் சத்தியம் வாங்கி இருவரும் மிரட்டியுள்ளனர்.
இதனால், கடும் மனவேதனைக்கு ஆளான அஜிதா, கருவை கலைப்பதற்காக மருத்துவமனைக்கு வந்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து அஜிதா அளித்த புகாரின் அடிப்படையில், மணவாளக்குறிச்சி போலீசார் மாமனார் செல்வகுமார், அவருக்கு உடந்தையாக இருந்த காதல் கணவர் ஸ்ரீவிக்னேஷ், மாமியார் ராஜேஸ்வரி ஆகிய மூன்று பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து தலைமறைவாகியுள்ள கணவன், மாமனார், மாமியார் ஆகிய மூவரையும் கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.மகளாகப் பார்க்கவேண்டிய மருமகளை மாமனாரே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *