
டெல்லியில் தற்போது ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. முதல்-மந்திரியாக அதிஷி உள்ளார். சட்டசபையில் பதவிக்காலம் பிப்ரவரி 23-ந்தேதி நிறைவடைகிறது.
எனவே 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது.
இந்தத் தேர்தலில் பா.ஜ.க., ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இதுதவிர தேர்தல் களத்தில் மொத்தம் 699 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அந்த வகையில், டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.
வாக்குப்பதிவை ஒட்டி டெல்லி முழுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று மாலை 6.00 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவுபெறுகிறது. இதைத் தொடர்ந்து இன்று பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8-ம் தேதி எண்ணப்படவுள்ளன.
