Dehradun Protest Today: தொழிலாளர்களை மீட்க  5-வது நாளாகப் போராட்டம்!

Advertisements

சுமார் 96 மணி நேரத்திற்கும் மேலாகத் தொழிலாளர்கள் 40 பேர் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளனர்.

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணியின்போது விபத்து ஏற்பட்டது. 4.5 கி.மீ. நீளமுள்ள இந்தச் சுரங்கப் பாதையில் 200 மீட்டர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் 40 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மீட்புப் பணி இன்று 5-வது நாளை எட்டியுள்ளது. சுமார் 96 மணி நேரத்திற்கும் மேலாகத் தொழிலாளர்கள் 40 பேர் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகள் ஆகியவை வழங்கப்பட்டு வருவதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இடிபாடு நிகழ்ந்த இடத்தில் மேலும் ஒரு நிலச்சரிவு ஏற்பட்டதால் மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் நவீன இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் உதவியுடன் உள்ளே சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *