ADMK:நடிகை கவுதமிக்கு அதிமுகவில் முக்கிய பொறுப்பு..இ.பி.எஸ்.அதிரடி!

பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த நடிகை கவுதமிக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, நடிகை கவுதமி அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளராக நியமனம் செய்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மேலும், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளராகத் தடா பெரியசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளராகப் பாத்திமா அலி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதிமுக விவசாயப்பிரிவு துணைச் செயலாளராகச் சன்னியாசி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதிமுகவில் மிகப்பெரிய பதவியாகக் கருதப்படுவது கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி. அதிமுகவில் நீண்ட காலம் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் ‘கொள்கை பரப்பு துணைக் செயலாளர் பதவி நடிகை கவுதமிக்கு இபிஎஸ் வழங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *