Tiruvallur Train Fire Accident : திருவள்ளூர் டீசல் டேங்கர் ரயில் தீப்பிடித்து பயங்கர விபத்து!

Video Link : 👇📺

சென்னையில் இருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சரக்கு ரயிலானது புறப்பட்டு திருவள்ளூர் வழியாக அரக்கோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலானது திருவள்ளூர் ரயில் நிலையத்தை தாண்டி சிறிது தூரத்தில் வரதராஜன் நகர் என்ற பகுதியை கடக்கும்போது திடீரென கொழுந்து விட்டு எறிய தொடங்கியுள்ளது.இதனால் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டது. ஆயில் ஏற்றிக் கொண்டு செல்லும் சரக்கு ரயில் தீப்பற்றி எரிந்து கொண்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வந்திருந்தாலும் அருகே சென்று அணைக்க முடியாத அளவிற்கு இதனால் அரக்கோணம் சென்னை மார்க்கம் செல்லும் அனைத்து ரயில்களும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.பயங்கரமாக கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருப்பதால் தீயணைப்பு வாகனங்களும் அங்கே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இதுவரை நான்கு பெட்டிகள் எரிந்திருக்க கூடும் என கூறப்படுகிறது.

மேலும் வெடித்து சிதறுவதால் அருகிலுள்ள தண்டவாளங்களுக்கும் தீயானது பரவி எரிந்து கொண்டிருக்கிறது.ஆயில் ஏற்றிக்கொண்டு செல்லும் சரக்கு வாகனம் என்பதால் தீ தானாக கொஞ்சம் கொஞ்சமாக அணைந்தால் மட்டுமே தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீரை பாய்ச்சி கட்டுப்படுத்த முடியும் எனவும் கூறப்படுகிறது.

திருவள்ளூர் அருகே பற்றி எரியும் தீயில் இருந்து வெளியாகும் புகையானது திருவள்ளூர் புட்லூர் செவ்வாபேட்டை ரயில் நிலையம் வரை பரவி செல்வதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

சரக்கு ரயில் என்பதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *