நகர்: ஜம்மு காஷ்மீர் எல்லை வழியாக ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராகக் காஷ்மீர் காவல்துறையும், ராணுவமும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
உரி செக்டாரில் எல்லை கட்டுப்பாடு கோடு அருகே வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர், அங்கே சிலர் ஊடுருவ முயன்றதை கண்டனர்.
அவர்களுக்குப் பாதுகாப்பு படையினர் எச்சரிக்கை விடுத்தபோது இருதரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இதில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
தொடர்ந்து அந்தப் பகுதியில் கண்காணிப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.