தீபாவளிக்கு ஊருக்குச் செல்லப் பயணச்சீட்டு எடுக்க முயன்ற பொதுமக்கள் அதிர்ச்சி.!

Advertisements

இந்திய ரயில்வேயால் இயக்கப்படும் ரயில்களில் பயணம் செய்வதற்கான பயணச்சீட்டை முன்பதிவு செய்ய நாடு முழுவதும் ரயில் நிலையங்கள், குறிப்பிட்ட அஞ்சலகங்களில் முன்பதிவு நிலையங்கள் உள்ளன.

அந்த முன்பதிவு நிலையங்களுக்குச் செல்லாமல் இணையத்தில் முன்பதிவு செய்யும் வசதியை இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலாக் கழகம் எனப்படும் ஐஆர்சிடிசி (IRCTC) வழங்குகிறது.

ரயில்களில் இடம் இருக்கின்றதா? கட்டணம் எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை நெருக்கடி இல்லாக் காலங்களில் எவரானாலும் அணுகிப் பெற்றுக்கொள்ளலாம். நிலையங்களில் முன்பதிவு தொடங்கும் காலை எட்டுமணி, தற்கால முன்பதிவு தொடங்கும் பத்துமணி, பதினொரு மணி ஆகிய நேரங்களில் இந்தத் தளத்தில் ஏற்கெனவே விவரங்களைக் கொடுத்து லாக் இன் செய்தவர்கள் கடவுச்சொல்லை உள்ளிட்டே உள்நுழைய முடியும்.

அதுபோல் இதில் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய வேண்டுமென்றாலும் கடவுச்சொல் உள்ளிட்டே உள்நுழைந்து முன்பதிவு செய்ய முடியும்.

வழக்கமாகவே தற்கால முன்பதிவு முறையில் சீட்டு எடுப்பவர்கள் இணையத்தில் முட்டி மோதுவதால் அந்த நேரத்தில் இந்தத் தளம் மெதுவாகச் செயல்படும். நாடு முழுவதும் தீபாவளியை முன்னிட்டுச் சொந்த ஊருக்குச் செல்பவர்கள் தற்கால முன்பதிவுச் சீட்டு எடுப்பதற்காக இன்று முற்பகல் பதினொரு மணிக்கு முன் ஒரேநேரத்தில் அணுகியதால் ஐஆர்சிடிசி இணையத்தளம் முடங்கியது.

இதனால் தற்காலப் பயணச்சீட்டு எடுத்துப் பயணிக்கலாம் என்று எண்ணியிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அடுத்த ஒருமணி நேரத்துக்கு இந்தத் தளத்தில் பயணச்சீட்டை முன்பதிவு செய்யவோ, ரத்துச்செய்யவோ முடியாது என்று தளத்தில் குறிப்பிட்டிருந்தது.

எனினும் முற்பகல் 11.40 மணியளவில் ஐஆர்சிடிசி இணையத்தளம் மீண்டும் திறந்தது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *