
ஒகேனக்கல்:
காவிரி கரையோரங்களில் மழையின் அளவு குறைந்ததாலும் கர்நாடகா அணைகளிலிருந்து திறக்கப்பட்ட நீரானது முழுமையாக நிறுத்தப்பட்டதாலும் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாகக் குறைந்து வந்தது.
இந்த நிலையில் சில தினங்களாக வினாடிக்கு 1000 கன அடியாக நீர்வரத்து நீடித்து வந்த நிலையில் நேற்று வினாடிக்கு 700 கன அடியாகச் சரிந்தது.
இந்த நிலையில் இன்று காலை நீர்வரத்து மேலும் சரிந்து வினாடிக்கு 300 கன அடியாகக் குறைந்து வந்து கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் ஆங்காங்கே பாறைகளாகக் காட்சியளித்தது.
