5 டன் போதைப் பொருட்களை பறிமுதல் செய்தது இந்திய கடற்படை!

Advertisements

புதுடில்லி: 

அந்தமான் கடற்பகுதியில் மீன் பிடி படகு ஒன்றில், இருந்து 5 டன் போதைப் பொருட்களை இந்திய கடற்படை பறிமுதல் செய்தது.

அந்தமான் கடற்பகுதியில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக இந்திய கடற்படை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதனால் அந்தமான் கடற்பகுதியில் இந்திய கடற்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் மீன்பிடி படகு ஒன்றில், போதைப்பொருட்கள் கடத்தி செல்வதை கண்டுபிடித்தனர்.

அந்த மீன் பிடி படகைச் சுற்றி வளைத்த, கடற்படையினர் அவர்களிடமிருந்து 5 டன் போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர். படகில் இருந்த நபர்களைப் பிடித்துக் கடற்படை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 5 டன் அளவுக்குப் போதைப்பொருளை இந்திய கடற்படை கைப்பற்றியது இதுவே முதல் முறையாகும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *