ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் – சென்ட்காம் அறிக்கை!

Advertisements

ஈரானுக்கு எதிராக அதிகளவிலான தாக்குதல்களை அமெரிக்க படை தொடங்கியுள்ளதாக அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒரு பிரிவான ராணுவ அதிரடி படையான சென்ட்காம் தெரிவித்துள்ளது.

ஹார்மூஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதுகாப்பிற்காக ஈரான் மீது அமெரிக்கா புதிதாக தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானுக்கு எதிராக புதிய ராணுவ தாக்குதல்களை அமெரிக்கா அதிகரித்துள்ளது.  இதுபற்றி அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒரு பிரிவான ராணுவ அதிரடி படையான சென்ட்காம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியை எளிதில் கடந்து செல்லும் வகையில் வழிகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. வர்த்தக கப்பல்களின் போக்குவரத்து பாதுகாப்பிற்காகவும் மற்றும் கடல்சார் ஊழியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்து நிறுத்தும் நோக்கிலும் ஈரானுக்கு எதிராக அதிகளவிலான தாக்குதல்களை அமெரிக்க படை தொடங்கியுள்ளதாகக் கூறியுள்ளது.

 

இதையடுத்து, ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் வர்த்தக கப்பல் ஒன்றை தாக்கியதற்கு பொறுப்பேற்க செய்யும் வகையில் ஈரானிய படைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஹார்மூஸ் ஜலசந்தி தாக்குதல் நடத்தியவர்களை விரட்டியடித்து விட்டதாகத் தெரிவித்தார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *