Sabarimala: தேவசம்போர்டு மற்றும் காவல்துறையிடேயே மோதல் போக்கு!

Advertisements

கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலில் தேவசம்போர்டு மற்றும் காவல்துறையிடேயே  ஏற்படும் முரண்பாடால் மீண்டும் கூட்டநெரிசல் ஏற்படும் அபாயம்உள்ளது.மேலும் பக்தர்கள் தரிசனம் குறித்து  முறையான திட்டமிடலில்லை எனவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.

கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலில் மரகவிளக்கு பூஜைக்காகக் கடந்த 30தேதி நடைதிறக்கபட்டது.இதையடுத்து கேரளா, ஆந்திரா தெலுங்கானா, கர்நாடகா, தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்யக் குவித்து வருகின்றனர். ஏற்கனவே கடந்த மண்டல பூஜை காலகட்டத்தில் பக்தர்கள் அதிகளவில் குவிந்தநிலையில் கூட்டநெரிசலால் பல பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் திரும்பச் சென்றனர்.

குறிப்பாகக் குழந்தைகள் பெரியவர்கள் மிகவும் சிரமத்தைச் சந்தித்தனர். இதைகருத்தில் கொண்டு மகரவிளக்கு காலகட்டத்தில் பக்தர்கள் வருகைகுறித்த ஆன்லைன் பதிவில் கடுமையான கட்டுபாடுகள் விதிக்கபட்டு 80ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முறையிலும் 10ஆயிரம் பக்தர்கள் பம்பை நிலக்கல் பகுதிகளில் நேரடியாகப் பதிவு செய்யவும் திருவிதாங்கூர் தேவசம் போர்ட்டு நிர்வாகம்  அனுமதியளித்திருந்தது.

இந்தநிலையில் சபரிமலையில் தற்போது பத்தனம்திட்ட மாவட்ட நிர்வாகம் மற்றும் திருவிதாங்கூர் தேவசம் போர்ட்டு நிர்வாகம் மீண்டும் போதிய திட்டமிடலின்றி மகரவிளக்கு பூஜையைச் சந்திக்க துவங்கியுள்ளது. குறிப்பாகக் கூட்டநெரிசனின்போது திருப்பதி முறையில் ஏற்படுத்தபட்டுள்ள காத்திருப்பு அறைகளில் தேவையான அடிப்படை வசதிகள் கூட முறையாகச் செய்யாதநிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோல் காவல்துறையினர் தற்போது 5ஆம் கட்ட குழுவினர் பணியில் ஈடுபட்டுவரும் தரிசனத்திற்காக வரும்  பக்தர்கள்  எண்ணிக்கை மீண்டும் கட்டுபாட்டை மீறி அதிகரிக்க துவங்கியுள்ளதால்   காவல்துறையினருக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்ட்டு நிர்வாகம் இடையே முரண்டாடு ஏற்பட்டுள்ளது. மேலும் கட்டுபாடுகளை மீறித் தேவசம் போர்ட்டு அதிக பக்தர்களை அனுமதிக்க முயல்வதாகழும் காவல்துறை தரப்பில் குற்றசாட்டுகள் எழுந்துள்ளன.

இதன் காரணமாக மீண்டும் மண்டல பூஜை காலகட்டத்தை போலச் சபரிமலையில்  கூட்டநெரிசல் ஏற்படும் நிலையும் உருவாகியுள்ளது. குறிப்பாக முன்காலங்களில் காவல்துறையினரின் கட்டுபாட்டில் ஆன்லைனு முன்பதிவு இருந்தபோது போதிய கட்டுபாடுகள் இருந்தநிலையில் திருவிதாங்கூர் தேவசம்போர்ட்டு நிர்வாகம் நீதிமன்றத்தை நாடி ஆன்லைன் பதிவு முறையைத் தங்கள் கட்டுபாட்டில் கொண்டுவந்தனர். இதனால் காவல்துறைக்கு பக்தர்கள் வருகைகுறித்த முறையாகத் தகவல் இல்லை எனவும் இதன்காரணமாகப் பக்தர்கள் கூட்டத்தைக் கட்டுபடுத்த முடியவில்லை எனவும் காவல்துறை வட்டாரத்திலிருந்து குற்றசாட்டு எழுந்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *