D54 எனும் புதியப் படத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல்.!

நடிகர் தனுஷ் நடிக்கும் டி54 எனும் புதியப் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் நிறைவு கொண்டாட்டங்களில் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

பிரபல நடிகர் தனுஷ் நடிக்கும் டி54 என்ற புதிய படத்தினை போர் தொழில்’ பட இயக்குநரான விக்னேஷ் ராஜா இயக்கி உள்ளார். ஐசரி கணேஷ் தயாரிப்பில் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும், இதில், மமிதா பைஜூ, கருணாஸ், கே.எஸ். ரவிக்குமார், பிருத்வி பாண்டியராஜன், குஷ்மிதா மற்றும் நிதின் சத்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், ‘D54’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு கொண்டாட்டங்களில் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இதில்,தனுஷ் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இனிவரும் நாட்களில் , ‘D54’ படத்தின் புதிய அறிவிப்புகள் வெளியாகக்கூடும் என்பதால் சினிமா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *