சென்னையில் கே,என,நேரு இல்ல திருமண விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ ஸ்டாலின் விரைவில் தவெக ஆட்சி கவிமும். உடன் பிறப்புக்களே தேர்தலை சந்திக்க தயாராக இருங்கள் என்றார். இது போதாதென்று ரகுபதி 60 தவெக எம்,எல்,ஏக்கள் கட்சி தாவ தயாரா இருக்கிறார் என்கிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் முதல்வர் விஜய் தன் கட்சியின் முக்கிய பிரமுகர்களுக்கு வேலை கொடுத்துள்ளார். இதை பற்றிதான் பார்க்கப்போகிறோம்.
இதை கருமே கண்ணா கொண்ட மாண்புமிகுக்கள் நம்ம கட்சிக்கு வந்துவிடுங்கள் என பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறார்களாம் மாண்புமிகுக்கள். த.வெ.க ஆட்சி அமைந்து 6 மாதங்கள் ஆகிவிட்டதால் சட்டமன்றத்தில் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் சூழல் தமிழக அரசியலில் உருவாகியிருக்கிறது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் கே.என் நேரு இல்லத் திருமண விழாவில் பேசிய ஸ்டாலின், த.வெ.க ஆட்சி கவிழ்ந்து தி.மு.க ஆட்சி விரைவில் அமையும் எனப் பொருள்பட பேசியிருக்கிறார். த.வெ.க ஆட்சி கவிழ்ந்துவிடும் என தி.மு.க-வினர் பேசியது முதல்வர் தரப்புக்கு கடும் டென்ஷனை கொடுத்திருக்கிறதாம்.
தி.மு.க-வினரை தீயசக்தி என நாம் சொல்லிவருவதால் தி.மு.க-விலிருந்து த.வெ.க-வில் யாரையும் இதுவரை சேர்க்கவில்லை. ஆனால், எங்கள் ஆட்சியை கவிழ்க்க திட்டமிடும் தி.மு.க முன்னாள் அமைச்சர்களுக்கு பாடம் புகட்டும் முனைப்பில் தி.மு.க முன்னணி நிர்வாகிகளை தூக்குங்க என முதல்வர் மாண்புமிகுக்கள் சிலருக்கு உத்தரவிட்டிருக்கிறாராம்.
அப்படி விஜய் ஆட்சியை கவிழுக்க முடியாவிட்டால் ஸ்டாலின் இதை செய்ய தயாரா. கொளத்து£ர் தொகுதி எம்.எல்.ஏ வி,எஸ் பாபு சமீபத்தில் இறந்துபோனார். இப்போது அத்தொகுதி காலியாக உள்ளது. அத் தொகுதி மக்கள்தான் ஸ்டாலினை தோற்கடித்தனர். அப்படியிருந்தும் தனக்கு வாக்காளித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பத்தற்காக தெரு தெருவாக சென்றார்.
அப்போது மக்கள் ஸ்டாலினை பார்த்து நாங்கள் தப்பு செய்து விட்டோமென்று அவரிடம் அத் தொகுதி மக்கள் கூறினார்களாம். இப்போதுதான் கொளத்துர் தொகுதி காலியாகி விட்டதது இல்லையா இன்னும் சில மாதங்களில் 5 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடக்க இருக்கிறது அதோடு கொளுத்து£ருக்கும் நடக்கும். இத் தொகுதியில் போட்டியிட ஸ்டாலின் தயாரா.
தி.மு.க-வினரை தூக்குங்கள் என முதல்வர் சொல்லிவிட்டதாலேயே தி.மு.க-வினர் பலர் த.வெ.க-வுக்கு வந்துவிடுவார்கள் எனச் சொல்லிவிட முடியாது. நாளுக்கு நாள் த.வெ.க ஆட்சிமீதான மக்களின் ஆதரவு குறைந்துவருவதாலும் த.வெ.க-வுக்கு சென்றால் எந்தவித முக்கியத்துவம் இல்லை என்பதால் ஏற்கனவே இணைந்த அ.தி.மு.க-வினரே வெளியேறும் மூடில் இருக்கிறார்கள். இருந்தாலும் சீனியர் மாண்புமிகுக்கள் சிலர் சில முயற்சிகள் மேற்கொள்வது இயல்பு. யார் இணைகிறார்கள் எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.



