இந்திரா காந்தி பிறந்தநாள்! நாடாளுமன்றத்தில் மலர் தூவி மரியாதை..!

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளையொட்டி நாடாளுமன்றத்திலும், அவரின் நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்தியாவின் பிரதமராக 1966 முதல் 1977 வரையிலும், அதன்பின் 1980 முதல் 1984 வரையிலும் இருந்தவர் இந்திரா காந்தி. அவர் ஆட்சிக்காலத்தில் மன்னர் மானியம் ஒழிப்பு, வங்கிகளை நாட்டுடைமை ஆக்கியது ஆகியன துணிச்சலான செயல்களாகப் பாராட்டப்பெற்றன.

அவரின் பிறந்த நாளையொட்டித் தில்லியில் உள்ள அவர் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன கார்கே, சோனியா காந்தி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதேபோல் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திரா காந்தியின் உருவப்படத்துக்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன கார்கே, சோனியா காந்தி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *