Electricity bill: குறைப்பு!

மின் கட்டணம் குறைப்பு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

அடுக்குமாடி குடியிருப்பு, பொது மின் இணைப்புக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.8 லிருந்து ரூ.5.50ஆக குறைத்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்களுடனான களஆய்வு ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். மறைமலை நகரில் இருக்கக்கூடிய மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவன அரங்கில் இரண்டாம் நாள் களஆய்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் 4 மாவட்ட ஆட்சியர்களுடன் கள ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது முதலமைச்சர் பேசியதாவது,  திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் அதிகாரிகளின் சிறப்பான பணியால் மக்களைச் சென்றடைந்துள்ளது.

அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

மாநகராட்சி சாலை பணிகள், நகராட்சி கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டம் உள்ளிட்ட பணிகள்குறித்து ஆய்வு செய்யப்பட்டது. வளர்ச்சிப் பணிகளைக் குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேற்றித் தர வேண்டும். அரசின் உட்கட்டமைப்பு பணிகள் பெரும் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படுகின்றன. உட்கட்டமைப்பு பணிகளைக் குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேறாவிட்டால் திட்டச் செலவு அதிகமாகும். வளர்ச்சித் திட்டங்களைக் குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேற்ற வேண்டும்.நாவலூர் சாலையில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படாது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *