தாயின் மறைவு.. இறுதிச் சடங்குகளைச் செய்த உத்தரப் பிரதேச முதல்வர்..!

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் தாய் காலமானதையடுத்து, அவருக்கான இறுதிச் சடங்குகளைச் செய்து உடலை எரியூட்டினார்.

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த ஊர் உத்தரக்கண்ட் மாநிலம் பஞ்சூர் ஆகும். அங்கு வாழ்ந்து வந்த யோகியின் தாய் சாவித்திரி தேவி நேற்றுக் காமானார்.

இதையடுத்துச் சொந்த ஊருக்குச் சென்ற யோகி ஆதித்யநாத், தாயின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இறுதிச் சடங்குகளைச் செய்தபோது அழுத யோகி ஆதித்யநாத் தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டார்.
தன் தாயின் உடலை வாகனத்தில் ஏற்றும் வரை சுமந்து சென்றார்.

அரித்துவாரத்தில் யோகியின் தாய் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது. இதில் உத்தரக்கண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, பாபா ராம்தேவ், சாதுக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மகனும் உத்தரப் பிரதேச முதலமைச்சருமான யோகி ஆதித்யநாத் எரியூட்டியுதையடுத்து அவர் தாய் உடல் தகனம் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *