சோதிடர் சொன்ன இடத்தில் தலைமைச் செயலகமா? தவெக அரசைச் சாடிய ஸ்டாலின்.!

த.வெ.க. அரசு சோதிடரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு பட்டினப்பாக்கத்தில்தான் தலைமைச் செயலகம் கட்டுவோம் என மீனவர்களின் பாரம்பரிய வாழ்விடத்தை அழிக்கத் துடிப்பதாகத் திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சிக்காலத்தில் மீனவர்களின் நலனுக்காகச் செயல்படுத்திய திட்டங்களைப் பட்டியலிட்டுள்ளார். இப்போதைய த.வெ.க. அரசோ சோதிடரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு பட்டினப்பாக்கத்தில்தான் தலைமைச் செயலகம் கட்டுவோம் என மீனவர்களின் பாரம்பரிய வாழ்விடத்தை அழிக்கத் துடிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

திரையில் மீனவராக நடித்து ஏமாற்றிய முதலமைச்சருக்கு மீனவர்களின் உண்மையான போராட்டக் குணம் பற்றித் தெரியவில்லை என்று கூறியுள்ளார். அலைகளோடு போராடித் தமது உயிரைப் பணயம் வைத்து உணவளிக்கும் மீனவ மக்களின் துணிவைப் போற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *