நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றி வரும் மீனவப் பெருமக்களின் அர்ப்பணிப்பு மகத்தானது என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், உலக மீனவர் நாளில் மீனவர்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தங்களின் கடின உழைப்பால் நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றி வரும் மீனவப் பெருமக்களின் அர்ப்பணிப்பு மகத்தானது என்று கூறியுள்ளார்.
எனவே அவர்களின் பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்வது அனைவரின் கடமையாகும் என்று தெரிவித்துள்ளார்.
மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத் வெளியிட்டுள்ள பதிவில், மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், அவர்களின் குடும்பங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் தவெக அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில், தங்களின் கடின உழைப்பாலும், அயராத அர்ப்பணிப்பாலும் கடல்சார் வளங்களைப் பாதுகாத்து, மக்களின் உணவுத் தேவையை நிறைவு செய்யும் மீனவச் சொந்தங்களின் சேவை போற்றுதலுக்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்


