Advertisements

மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிப்பதாக மத்திய ரயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழிக்காக செயற்கை நுண்ணறிவு தளத்தை உருவாக்கும் நோக்கில் தனியார் நிறுவனம் சார்பில் தமிழ் ‘ஏ.ஐ.’ திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி சென்னை தரமணி ஐ.ஐ.டி. ஆராய்ச்சி பூங்கா வளாகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் தமிழ் ‘ஏ.ஐ.’ திட்ட நிறுவனர் அஷ்வத்தாமன் வரவேற்புரை ஆற்றினார்.
இதில் மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று பேசினார். அப்போது அவர், இந்த திட்டம் தமிழுக்கு மட்டுமல்ல இந்திய மொழிகள் அனைத்திற்கும் ஏ.ஐ. துறையில் புதிய வாயிலாக அமையும் என தெரிவித்தார். செல்போன், லேப்டாப், சர்வர் போன்ற மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிப்பதாக தெரிவித்தார்.
ஏற்கனவே வந்தே பாரத் ரெயில் உற்பத்தி மையமாக தமிழ்நாடு திகழ்வதால், இந்தியாவின் எதிர்கால ரெயில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கும் என பெருமிதம் தெரிவித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் மலேசியா நாட்டின் தேசிய ஒற்றுமைக்கான துணை மந்திரி சரஸ்வதி கந்தசாமி, லண்டன் செல்ஸ்போர்ட் அரசு கவுன்சிலர் பாப்பா வெற்றி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Advertisements



