
முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் மற்றும் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஆறு பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக விழுப்புரம் மாவட்ட செயலாளர் பசுபதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் நாட்டார்மங்கலத்தில் கடந்த 11ஆம் தேதி சிவி.சண்முகம் தரப்பினருக்கும் மாவட்ட செயலாளர் பசுபதி தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், மாவட்ட செயலாளர் பசுபதி கார் மீது கல்விசபட்டது. இந்நிலையில் சிவி.சண்முகம் மற்றும் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் தாக்குதல் நடத்தப்பட்டதாக மாவட்ட செயலாளர் பசுபதி தெரிவித்துள்ளார்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பசுபதி விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். இது தொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தமிழகம் முழுவதும் ஆர்பாட்டத்தில் ஈடுபடபோவதாகத் தெரிவித்தார்.



