Advertisements

தோட்டக்கலைத்துறைக்கு தனி அமைச்சகம் கொண்டுவரவில்லை என்றால், வரும் திங்கள் முதல் தொடர்போராட்டம் நடத்தப்படும் என்றும், சென்னையில் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் நலச்சங்கத்தின் மாநிலத்தலைவர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை-சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் நலச்சங்கத்தின் மாநிலத்தலைவர் சிவக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தோட்டக்கலைத்துறை வேளாண்மைத்துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது என்றும், சிறு குறு விவசாயிகள் அதிகமாக உள்ளனர் எனவும், காய்கறி, பூ உள்ளிட்ட தினசரி வருமானத்தை தோட்டக்கலைத்துறை பயிர்கள்தான் தருகிறது எனவும், 16 இலட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது என்றும், சுமார் 50-சதவீதம் வரை தோட்டக்கலைத்துறை பயிர்கள் தான் ஏற்றுமதியாகி, வருமானத்தை அளிக்கிறது என்றும், 10 மாநிலங்களில் தோட்டக்கலைக்கு என தனித்துறை உள்ளது.
ஆனால் தமிழகத்தில், கதம்ப மாலை போன்று, வேளாண்துறை, தோட்டக்க்லை, வேளாண் பொருள் விற்பனை, வேளாண் பொறியியல் துறை என 4 துறைகள் உள்ளது என்றும், 4-துறைகளையும் ஒருங்கிணைத்து, விவசாயிகளுக்கு தகவல் அளிக்கும்போது, சிக்கல்கள் ஏற்படுகிறது எனவும், ஏன் என்றால், பொறியியல் சார்ந்த அதிகாரிக்கு தோட்டக்கலைத்துறை குறித்து தெரியாது எனவும், தெரிவித்த அவர், தோட்டக்கலைத்துறைக்கு தனி அமைச்சகம் கொண்டுவரமுடியும் என்றும், அவ்வாறு உருவாக்கினால் ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை கொடுக்கும் துறையாக மாறும் எனவும், அவ்வாறு செய்யவில்லை என்றால் வரும் திங்கள் முதல் தொடர்போராட்டம் நடத்தப்படும் என்றும், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் நலச்சங்கத்தின் மாநிலத்தலைவர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
Advertisements



