Cuddalore: நடத்துனரை தாக்கிய போதை ஆசாமி.. பேருந்துகளை நிறுத்திவிட்டு போராட்டம்!

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில அரசுப் பேருந்துக்கு வழி விடாமல் சென்றதை தட்டி கேட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது போதை ஆசாமி தாக்குதல்நடத்தியதால் விருதாச்சலம் பகுதியில் அனைத்து அரசு ஓட்டுனர் நடத்துனர்கள் பேருந்துகளை அங்கங்கே நிறுத்திவிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சிதம்பரம் கடலூர் செல்லும் பிரதான சாலையில் போதை ஆசாமி ஒருவர் அரசுப் பேருந்துக்கு வழி விடாமல் பேருந்து முன் இருசக்கர வாகனத்தில் தாறுமாறாகச் சென்றுகொண்டிருந்தார். இதனால் அரசுப் பேருந்து ஓட்டுனர் ஹாரன் அடித்து வழி கேட்டதற்கு, முன்னாள் சென்ற பைக்கை பேருந்து முன் நெடுச்சாலையில் வழிமறித்து நிறுத்திவிட்டு, பேருந்து நடத்துநர் மீது போதை ஆசாமி கடும் தாக்குதலில் நடத்தியுள்ளார். இதனால் பேருந்து நடத்துநருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது.

இதைப் பற்றித் தகவல் அறிந்த அரசு ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் மீது நடந்த தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து விருத்தாசலம் நகரம் முழுவதும், பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி விட்டுத் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் விருத்தாசலம் நகரம் முழுவதும் ஒரு மணி நேரத்துக்கு மேலாகப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டத வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *