Advertisements

பா.ஜ.க.வை கண்டு நடுங்கும் தம்மி முதலமைச்சர் ஜோசப்விஜய் என்று சென்னை தேனாம்பேட்டையில், தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் விமர்சித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் அண்ணா அறிவாலயத்தில், திமுக சட்டத்துறை இணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இ.பரந்தாமன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, நூறு நாட்களில் எந்த அளவிற்கு தமிழ்நாட்டை நாசமாக்க முடியுமோ, அந்த அளவிற்கு நாசமாக்கி உள்ளது த.வெ.க அரசு என்றும், கத்தி பட பாணியில் விவசாயியாக வசனம் பேசியுள்ள, முதலமைச்சர் ஜோசப்விஜய் தற்போது, விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறார் என்றும்,
தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் குற்றங்கள், கொலைகள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காக்கிறார் முதலமைச்சர் ஜோசப்விஜய் என்றும், பழனி கோவில் விவகாரத்தில் 100 கோடி அரசு நிலத்தை தனி நபருக்கு விற்கப்பட்டது என்பன உள்ளிட்ட எண்ணற்ற சம்பவங்கள் நூறு நாட்களில் நடைபெற்றுள்ளது என்றும்,
இவைகள்தான் த.வெ.க.அரசின் நூறு நாள் சாதனை என்றும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன் விமர்சித்துள்ளார்.
Advertisements


