கன்னட மக்கள் பாதிக்கப்பட்டால் கர்நாடக அரசு வேடிக்கைப் பார்க்குமா? -பெ.சண்முகம் வினா.!

Advertisements

வேறு மாநிலங்களில் கன்னட மக்கள் பாதிக்கப்பட்டால் கர்நாடக அரசு வாயை மூடிக்கொண்டு வேடிக்கைப் பார்க்குமா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வினவியுள்ளளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கர்நாடக மாநிலத்தில் மூன்று தமிழர்கள் வனத்துறையினரால் கொல்லப்பட்டது தொடர்பாக தமிழ்நாடு தலையிடக் கூடாது என்று கர்நாடக முதலமைச்சர் டி. கே. சிவக்குமார் கூறியிருப்பதற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

உலகில் தமிழ் மக்கள் எங்குப் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு நியாயமும் நீதியும் கிடைக்கக் குரல் கொடுப்பது தமிழ்நாடு தலைவர்கள் மற்றும் அரசின் கடமையாகும் என்று கூறியுள்ளார்.

இக்கொலை சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்த தமிழ்நாட்டு முதலமைச்சரை, “உங்கள் வேலையைப் பாருங்கள்” என்று கர்நாடக முதலமைச்சர் கடுமையான வார்த்தைகளில் கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வேறு மாநிலங்களில் கன்னட மொழி பேசும் மக்கள் பாதிக்கப்பட்டால் கர்நாடக அரசு வாயை மூடிக்கொண்டு வேடிக்கைதான் பார்க்குமா என்பதை விளக்க வேண்டுகிறோம் என்று வினவியுள்ளார்.

கர்நாடக நிர்வாகத்தில் தமிழ்நாடு தலையிடுவதாகப் பிரச்சனையைத் திசை திருப்புவதை விடுத்து, கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதில் கர்நாடக அரசு கவனம் செலுத்தட்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *