சவுதியில் மீனவர் பலி: உடல் அனுப்புவதில் தாமதம் ஏன்? – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம்.!

சவுதி அரேபியாவில் புலன் விசாரணை நடைபெறுவதால் தான் உயிரிழந்த மீனவர்கள் உடலை தமிழகம் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் இன்று  மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர் சவுதி அரேபியாவில் உயிரிழந்தது தொடர்பாக அ.தி.மு.க. சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது, சவுதியில் ஈரான் கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவரின் உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், காசிமேடு மீனவர்கள் 80 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் படகுகளை ஆந்திர அரசு பறிமுதல் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.தொடர்ந்து, திமுக சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலு பேசியபோது, அவசரம் கருதி எடுக்கப்படும் பிரச்சனைகளுக்கு 15 நாட்கள் கழித்து பதில் வந்தால் எப்படி? என்று கேள்வி எழுப்பினார்.

இதனை தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் பேசியபோது, உயிரிழந்த மீனவருக்கு அரசு நடவடிக்கை எடுத்து மானியம் தரவேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்து பேசிய விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, புலன் விசாரணை நடைபெறுவதால தான் உயிரிழந்த மீனவர்கள் உடலை தமிழகம் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மீனவர் மாவீரனின் உடலை தாயம் கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *