ஈரான் உடன் பேச்சுவார்த்தை இல்லை: டிரம்ப் திட்டவட்டம்.!

ஈரானிய இஸ்லாமியக் குடியரசுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஈரானிய இஸ்லாமியக் குடியரசுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை, எதிர்காலத்திலும் திட்டமிடப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். கடற்படை முற்றுகை தொடர்ந்து முழு வீச்சில் அமலில் உள்ளதாகக் கூறியுள்ளார்.
ஹார்முஸ் நீரிணை செயல்பாட்டில் இருப்பதாகவும், கடற்படை கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, முற்றுகையை நீக்குதல், முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை விடுவித்தல் உள்ளிட்ட 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்கா தனது கடமைகளை நிறைவேற்றும் வரை, ஹார்முஸ் நீரிணையை தெஹ்ரான் மீண்டும் திறக்காது என்று கூறினார்.
அமெரிக்கா தனது வாக்குறுதிகளை மீறுவதாக கூறியதற்குப் பதிலளிக்கும் விதமாக, ஈரானின் இராணுவ மற்றும் இராஜதந்திர வழிமுறைகள் இணைந்து செயல்படும் என்றும், பதற்றம் அதிகரித்தால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *