Advertisements

சென்னையில் மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு இன்று நடைபெறுகிறது.
சென்னை அருகே கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 31ஆவது தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், கேரளம் முதலமைச்சர் சதீசன், கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
மேலும், அந்தந்த மாநிலத் தலைமைச் செயலாளர்கள், உள்துறைச் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். மாநாட்டில் மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள், கூட்டுறவை பலப்படுத்துவது, கட்டமைப்பு மேம்பாடு, நீர்வள பகிர்வு, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
இந்நிலையில்,
இந்நிலையில்,
மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று மாலை 4.50 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை புறப்படுகிறார். இரவு 7.40 மணிக்குச் சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். விமான நிலையத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் கட்சியினர் வரவேற்கின்றனர். பின்னர் அவர், காரில் கோவளம் செல்கிறார்.
Advertisements



