Cow rescued: பசு உயிருடன் மீட்கப்பட்டது!

Advertisements

ஆ.கருப்பம்பட்டி பகுதியிலுள்ள தோட்டப்பகுதியில் கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்கப்பட்டது!

உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பி.மேட்டூரைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (வயது 63), விவசாயி. இவர் ஆ.கருப்பம்பட்டி பகுதியிலுள்ள தோட்ட வீட்டில் குடியிருந்து வருகிறார். தோட்டப்பகுதியில் கால்நடைகளை வளர்த்து வரும் நிலையில், நேற்று தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த சினைப்பசு ஒன்று கயிற்றை அறுத்துக் கொண்டு மேய்ச்சலுக்கு சென்றது.

Advertisements

அப்போது எதிர்பாராதவிதமாக அங்குள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்தது..60 அடி ஆழமுள்ள கிணற்றில் 30 அடி நீர் நிரம்பியிருந்த கிணற்றில் உயிருக்குப் போராடிய நிலையில், உப்பிலியபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவலளித்தனர்.

தகவலின் பேரில் நிலைய பொறுப்பாளர் சங்கப்பிள்ளை தலைமையில் 6 வீரர்கள் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கயிறு மூலம் பொதுமக்கள் உதவியுடன் சினைப்பசுவை உயிருடன் மீட்டனர். பின்னர் பசுவை சுப்ரமணியனிடம் ஒப்படைத்தனர். சினைப்பசு மீட்கப்பட்டதால் சுப்ரமணியன் மகிழ்ச்சி அடைந்தார். தீயணைப்பு வீரர்களுக்கு அவர் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *