Michelle Lee: குளியலறை சண்டைக் காட்சியில் நடிப்பு!

Advertisements

குளியலறை சண்டைக் காட்சியில் நடிப்பு!

சண்டைக் காட்சிகளைப் படமாக்குவதில் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை மிஷ்ஷேல் லீ, ஸ்கார்லட் ஜாக்சனுடன் ‘பிளாக் விடோ’, ஜானி டெப்புடன் ‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்ஸ்’, பிராட் பிட்டுடன் ‘புல்லட் ட்ரெய்ன்’, டாம் ஹார்டியுடன் ‘வெனோம்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது சல்மான்கான், கத்ரீனா கைஃப்புடன் இணைந்து ‘டைகர் 3’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

இதில் கத்ரீனா கைஃப்புடன் நீண்ட நேரம் இடம் பெறும் துருக்கி குளியலறை சண்டைக் காட்சியில் நடித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இக்காட்சிக்காக கத்ரீனா கைஃப்பும், நானும் இரண்டு வாரங்கள் ரிகர்சல் பார்த்தோம்.

சண்டைக் காட்சிக்காக ஒரு அரங்கம் அமைக்கப்பட்டது. டவல்களால் எங்கள் உடலை மறைத்தபடி நடித்தது மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஒருவரை ஒருவர் காயப்படுத்தாமல் இருக்க சரியான தூரத்தைக் கடைபிடித்தோம்’ என்றார். மனீஷ் சர்மா இயக்கிய இப்படம், வரும் நவம்பர் 12ம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் திரைக்கு வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *