காங்கிரஸ் கட்சியின்எவ்வித வெளிப்படைத் தன்மையும் இல்லை – ஜோதிமணி.!

Advertisements

காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத் தனமையும் இல்லை என நாடளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி குற்றம் சாட்டியுள்ளார்.

நாடளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத் தனமையும் இல்லை என்றும் வெளிப்படைத்தன்மையோடும்,விரிவான விவாதத்திற்குப் பின்பே தொகுதி தேர்வு செய்யப்படவேண்டும் என்ற தங்கள் கருத்தை பொறுப்பாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் ஆண்டாண்டு கால உழைப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்காக ஒரு சிறு துறும்பைக் கூட கிள்ளிப்போட்டிராத சிலர் விற்றுத்திண்பதைப் பார்க்க வேதனையாக உள்ளது என்று கூறினார். இந்த மோசமான சூழலைக் கேள்வி கேட்காமல் மௌனமாக இருக்க முடியாது என்றும் லட்சக்கணக்கான தொண்டர்களின் உணர்வும்,உழைப்புமே கட்சி என்றும் குறிப்பிட்டார்.

விற்பனை அணுகுமுறையோடு தான் வேட்பாளர் தேர்வும் நடக்குமென்றால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது என்று தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *