Uttar Pradesh:திருமணத்திற்கு புறப்பட்ட மணமகன்… சிறுநீர் கழிக்கச் சென்றபோது பாம்பு கடித்து கொடூரம்!

Advertisements

Groom Died By Snake Bite: திருமணத்திற்கு புறப்பட்டபோது அவசரமாகப் பக்கத்தில் இருந்த புதரில் சிறுநீர் கழிக்க சென்றபோது, பாம்பு கடித்து மணமகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Uttar Pradesh Groom Died By Snake Bite: உத்தர பிரதேசம் மாநிலம் புலந்த்ஷஹர் மாவட்டத்தில் திபாய் நகரின் அருகே உள்ள அகர்பாஸ் கிராமத்தில் 26 வயதான மணமகன் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

26 வயதான அந்த இளைஞரின் பெயர் பிரவேஷ் குமார். இவர் ஃபரிதாபாத் நகரில் பலசரக்கு கடை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இவருக்கும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. திருமணம் நடைபெற இருந்த சூழலில் இந்த அசாம்பாவிதம் நடந்திருக்கிறது எனக் கூறப்டுகிறது.

சிறுநீர் கழிக்க சென்றபோது விபரீதம்

இந்தச் சம்பவம்குறித்து பிரவேஷின் சகோதரி கூறுகையில்,”திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் கடந்த வியாழக்கிழமை (ஜூலை 11) இரவு தயாராக இருந்தது. அப்போது பிரவேஷ் ஒரு புதருக்கு அருகே சிறுநீர் கழிக்க சென்றிருக்கிறார். அவர் நீண்ட நேரம் திரும்ப வராததை கண்டு குடும்ப உறவினர்கள் அங்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது சுயநினைவின்றி பிரவேஷ் அங்கு விழுந்து கிடந்துள்ளார். உடனடியாக அவர் உள்ளூர் மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும் அவர் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) காலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்” என்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *