தாக்குதலை நிறுத்த வேண்டும் : ஜி 7 நாடுகள் கோரிக்கை..!

Advertisements

பொதுமக்கள் மற்றும் மிக முக்கியமான அரசு கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படுவது உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கர் மற்றும் பிரேசில் ,தென் கொரியா, சவூதி அரேபியா நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்றனர். இதையடுத்து, ஜி7 நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பொதுமக்கள் மற்றும் மிக முக்கியமான அரசு கட்டமைப்புகள் மீது மத்திய கிழக்கு போர் ஏற்படுத்தும் பாதிப்புகளைக் குறைக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ளது. போர் காரணமாக பொருளாதாரச் சரிவுகளைச் சமாளிக்க வேண்டும், என்றும் குறிப்பாக பொதுமக்களை பாதிக்கும் எரிபொருள்,மற்றும் வர்த்தக போக்குவரத்தை பாதிப்புகளைக் குறைக்க நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் எந்த தடையும் இன்றி பாதுகாப்பாக செல்வதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *