Congo Mine Accident : மண்ணில் புதைந்து 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!

காங்கோவில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மண்ணில் புதைந்து 200க்கும் மேற்பட்ட தொழிலாளர் உயிரிழந்துள்ளனர்.

காங்கோவின் ருபாயாவில் கோல்டன் கனிம சுரங்கம் எம் 23 என்ற கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சுரங்கத்தில் இருந்து டான்டலம் என்ற அரிய  உலோகம் வெட்டி எடுக்கப்படுகிறது. இதில், கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது.

அப்போது அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் மண்ணில் புதைந்தனர். இந்த நிலச்சரிவில் சிக்கி 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாகக் கிளர்ச்சிப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் அதிர்ச்சியுடன் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சுரங்கத் துறையில் நடைபெற்ற மிக மோசமான விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *