
நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் அளித்த புகார் மனு சமூக வலைத்தளங்களில் வெளியாகிய நிலையில் இந்து அமைப்புகளால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கவாயிடம் வழங்கிய புகார் மனு சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. இதனைத் தொடர்ந்து, அவர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதனடிப்படையில், விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பபட்டது. இதையடுத்து மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்தில், விசாரணைக்காக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நேரில் ஆஜராகினார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, வாஞ்சிநாதன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, உச்சநீதிமன்ற நீதிபதியிடம், புகார் மனுவை ரகசியமாக வழங்கிய நிலையில், அதைச் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் தன்னைப் பற்றி அவதூறாகக் கருத்துக்களை பதிவு செய்து வரும் நிலையில் தனது உயிருக்கு அபத்து உள்ளதாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.



