காமன்வெல்த் சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டி கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 49 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் ஞானேஸ்வரி யாதவ் 176 கிலோ ( ஸ்நாட்ச் பிரிவில் 78 கிலோ, ஜெர்க் பிரிவில் 98 கிலோ) எடையை தூக்கி தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனையான ஜிலி தலபெஹரா 169 கிலோ எடையை தூக்கி (75 94) வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
ஆடவருக்கான 55 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் முகுந்த் அஹர் 239 கிலோ (106 133) எடையை தூக்கி தங்கம் வென்றார். வங்கதேசத்தின் ஆஷிகுர் ரஹ்மான் தாஜ் 207 கிலோ (92 115) எடையை தூக்கி வெள்ளிப் பதக்கம் பெற்றார். மகளிருக்கான 45 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் கோமல் கோஹர் 154 கிலோ (68 86) எடையை தூக்கி தங்கப் பதக்கம் வென்றார். இலங்கையின் ஸ்ரீமாலி சமரகோன் திவிசேகர முதியன்சேலாகே 146 கிலோ (61 85) எடையை தூக்கி வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார்