மக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேற்றம்!

Advertisements

சேலம் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில், ரூபாய் 22-ஆயிரத்து 117 கோடி மதிப்பீட்டில், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக ஓமலூரில் நடைபெற்ற விழாவில், அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் தமிழக அரசின் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்து கொண்டு, ஓமலூர், காடையாம்பட்டி ஆகிய 2 தாலுகாவை சேர்ந்த 476 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். அதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜேந்திரன், ஓமலூர் காடையாம்பட்டி தாலுகாவில் மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, 3-கோடியே 85-லட்சம் மதிப்பீட்டில்,  476 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது என்றும், சேலம் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில், ரூபாய் 22-ஆயிரத்து 117 கோடி மதிப்பீட்டில், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றும், அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *