தமிழகத்தின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசியுள்ளார்.
2021-ல் திமுக வெற்றி பெற்று, முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அன்றே தலைமைச் செயலராக இருந்த ராஜீவ்ரஞ்சன் மாற்றப்பட்டு, வெ.இறையன்பு புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் அவர் பணியாற்றிய நிலையில் கடந்த ஜூன் 30ம் தேதி அவர் ஓய்வுபெற்றார்.
இதையடுத்து, புதிய தலைமைச் செயலராக நகராட்சி நிர்வாகத் துறைச் செயலராக இருந்த சிவ்தாஸ் மீனாவை நியமித்து, தலைமைச் செயலர் வெ.இறையன்பு உத்தரவிட்டார். இதன்படி கடந்த ஜூன் 30ம் தேதி மாலை புதிய தலைமைச் செயலராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து புதிய தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று (ஜூலை 13), தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசியுள்ளார்.