கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி ரோடு ஷோ!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை நாளான 23ஆம் தேதி முதல் முப்பெரும் அரசு விழாவாக ராஜேந்திர சோழனால் வடிவமைக்கப்பட்ட சோழேஸ்வரர் ஆலய வளாகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ராஜேந்திர சோழனின் 1000வது பிறந்த நாளான முப்பெரும் விழாவின் கடைசி நாளான இன்று  பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உள்ளார்.

இதனையொட்டி பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று  தமிழகம் வருகை தந்து உள்ளார். இந்நிலையில் திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாகப் பிரதமர் மோடி கங்கை கொண்ட சோழபுரம் வந்தடைந்தார். பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் தரையிறங்கிய போது அங்கிருந்த பா.ஜ.க.வினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

இதனையடுத்து பிரதமர் மோடி ரோடு ஷோ மேற்கொண்டார். அதாவது சோழகங்கம் என்று சொல்லப்படும் பொன்னேரியில் இருந்து கங்கை கொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள கோயில் வரை ரோடு ஷோ நடைபெற்றது. சுமார் 4 கி.மீ. தொலைவிற்கு நடைபெற்ற ரோட் ஷோவில் பிரதமர் மோடி காரில் நின்றபடியே பயணித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *