மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதிய அரசு பதவியேற்க வசதியாக, தன ராஜினாமா கடிதத்தை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து ஷிண்டே சமர்ப்பித்தார். இதையடுத்து, புதிய அரசு பதவியேற்கும் வரை அவர் காபந்து முதல்வராகச் செயல்படுவார். சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி 235 இடங்களை வென்று ஆட்சியமைக்க உள்ளது. பட்னாவிஸை முதல்வராகப் பாஜக முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.



