விவசாயிகளுக்கு குட் நியூஸ்: கரும்பு டன்னுக்கு ரூ.4,000 விலை – விஜய் அறிவிப்பு.!

Advertisements

மத்திய அரசு வழங்கும் தொகையுடன், தமிழக அரசு வழங்கும் தொகையும் சேர்த்து, கரும்பு டன்னுக்கு விவசாயிகளுக்கு ரூபாய் 4-ஆயிரம் விலையாக கிடைக்கும் என்று முதலமைச்சர் ஜோசப்விஜய் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டசபையின் 110-வது விதியின் கீழ் நெல் கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை குறித்து முதலமைச்சர் ஜோசப்விஜய் பேசினார்.

அப்போது, விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் நோக்கில் நெல், கரும்பிற்கான ஊக்கத்தொகையை அதிகரிக்க முடிவு செய்து உள்ளோம். சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூபாய் 289-ம், பொதுரக நெல் குவிண்டாலுக்கு ரூபாய் 150-ம் உயர்த்தி வழங்கப்படும் என்றும், இதன் மூலம் விவசாயிகளுக்கு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூபாய் 2-ஆயிரத்து 750-ம், பொது நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூபாய் 2-ஆயிரத்து 600 கிடைக்கும் என்றும் முதலமைச்சர் ஜோசப்விஜய் தெரிவித்தார்.

மேலும், சர்க்கரை ஆலைகளில் கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு மத்திய அரசு 3-ஆயிரத்து 290 ரூபாய் 50- காசுகள் வழங்குகிறது. அத்துடன் கரும்பிற்கான ஊக்கத்தொகையாக டன்னுக்கு 709-ரூபாய் 50-காசுகள் சேர்த்து, தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் என்றும், இதன் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூபாய்  4-ஆயிரம் விலையாக கிடைக்கும் என்றும், நமது த.வெ.க.அரசு விவசாயிகளை விட்டுவிடாமல், தோளோடு தோள் கொடுத்து, விவசாயிகளுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றும் முதலமைச்சர் ஜோசப்விஜய் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *