Appavu:மசோதாக்களை காரணமின்றி கவர்னர் நிறுத்தி வைக்கிறார்!

மசோதாக்கள் முடங்குவதால் மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லையெனச் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

சென்னை:டெல்லி காமன்வெல்த் நாடாளுமன்ற கூட்டமைப்பின் இந்திய பிராந்திய கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது;

“சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாக்களை காரணமின்றி கவர்னர் நிறுத்தி வைக்கிறார். மக்களை, மாநிலங்களவை மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஓரிரு மணி நேரத்தில் ஒப்புதல் வழங்குகிறார். மசோதாக்கள் முடங்குவதால் மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல் போகிறது.

பெரும்பான்மை உறுப்பினர்களால் நிறைவேற்றப்படும் சட்ட முன்வடிவுகளை செயல்படுத்த முடியவில்லை. பேரவையை அவமதிப்பது அந்தச் சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்த மக்களை அவமதிப்பதாகும்.” எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *