திருடப்படும் மக்கள் தீர்ப்பு வாய்திறக்காத தேர்தல் ஆணையம் – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.!

Advertisements

திருடப்படும் மக்கள் தீர்ப்பு வாய்திறக்காத தேர்தல் ஆணையம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

அரியானாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு, ஆட்சி திருட்டு நடந்திருப்பதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆதாரங்களுடன் விளக்கி உள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், பொய் வாக்குறுதிகளைக் கூறி 2014 இல், ஆட்சிக்கு வந்த பா.ஜ.க.வின் பிளவுவாத அரசியலை மக்கள் இனியும் நம்பத் தயாராக இல்லை என்றார்.

இதைத்தொடர்ந்து அவர், தேர்தலில் முறைகேடுகள் என்பதையெல்லாம் தாண்டி, வாக்காளர் பட்டியலிலேயே அப்பட்டமான அட்டூழியத்தை அரங்கேற்றி, மக்களின் ஜனநாயகத் தீர்ப்பைக் களவாண்டு, அம்பலப்பட்டு நிற்கிறது.

இதையடுத்து, வாக்காளர் சிறப்பு திருத்தம் என்ற பெயரில் மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதி என்பதற்கு பீகாரும் தற்போது வெளியாகியுள்ள அரியானாவுமே சான்று என்று தெரிவித்தார்.

இவை அனைத்துக்கும் பொறுப்பான தேர்தல் ஆணையம் இத்தனை குற்றச்சாட்டுகள், அடுக்கடுக்கான ஆதாரங்களோடு முன்வைக்கப்பட்டும் எந்த ஒரு முறையான விளக்கமும் அளிக்காமல் இருப்பது வேதனையளிக்கிறது என்று கூறி பதிவியுட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *