Tamil Nadu Consumer Goods Trading Corporation: தற்காலிக பணியாளர்களுக்கு போனஸ்!

Advertisements

தற்காலிக பணியாளர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் போனஸ்!

தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிபக்‌ கழக பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ்‌ வழங்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. இதன்படி, “சி” மற்றும்‌ “டி” பிரிவு பணியாளர்களுக்கு 2022-2023 ஆண்டுக்கான போனஸ்‌  8.33% மற்றும்‌ கருணைத்‌ தொகை  20% 2023-224-இல்‌ வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

Advertisements

போனஸ்‌ சட்டத்தின்‌ கீழ்வரும்‌ தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிபக்‌ கழகத்தில்‌ பணிபுரியும்‌ பணியாளர்களுக்கு அவர்களுடைய சம்பளத்தில்‌ 20% சதவீதம்‌ (போனஸ்‌ மற்றும்‌ கருணைத்‌ தொகை) வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. இது தவிர தற்காலிக அடிப்படையில்‌ பணிபுரியும்‌ தொழிலாளர்களுக்கு ரூ.3000/- கருணைத்‌ தொகையாக வழங்கவும்‌ ஆணையிடப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழ்நாடு முழுவதும்‌ உள்ள அனைத்து மண்டலங்கள்‌, நவீன அரிசி ஆலைகள்‌, கிடங்குகள்‌, நேரடி நெல் கொள்முதல்‌ நிலையங்கள்‌ மற்றும்‌ திறந்தவெளி சேமிப்பு மையங்கள்‌ ஆகியவற்றில்‌ பணிபுரியும்‌ சுமார்‌ 49,023 பணியாளர்களுக்கு ரூ.29/- கோடி போனஸ்‌ மற்றும்‌ கருணைத்‌ தொகை வழங்க ஆணையிடப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது என்று தமிழக கூட்டுறவு, உணவு மற்றும்‌ நுகர்வோர்‌ பாதுகாப்புத்‌ துறை அரசு கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *