Tamilselvan Marriage: காதலியை கரம்பிடித்த பிரபல சீரியல் நடிகர்!

சன் டிவியில் அடுத்தடுத்து பல சீரியல்களில் காமெடி வேடத்திலும், குணச்சித்திர வேடத்திலும் நடித்து வரும் நடிகர் தமிழ்ச்செல்வன், அவருடைய காதலி பூர்ணிமாவை கரம் பிடித்துள்ளார். இது குறித்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.

சீரியல்களில் மிக குறுகிய காலத்தில் தன்னுடைய எதார்த்தமான காமெடி நடிப்பால் பிரபலமானவர் குருவி தமிழ்ச்செல்வன். இவர் முதல் முதலில் அறிமுகமான ‘அபியும் நானும்’ சீரியலில் குருவி என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததால், இவரை ரசிகர்கள் குருவி தமிழ் செல்வன் என்றே அழைத்து வருகிறார்கள்.

‘அபியும் நானும்’ சீரியலை தொடர்ந்து, தமிழ்ச்செல்வன் தற்போது ‘மிஸ்டர் மனைவி’, ‘புதுவசந்தம்’ போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார். இவரின் நடிப்புக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.  இந்நிலையில் இவருக்கும், இவருடைய காதலியான பூர்ணிமா என்பவருக்கும் நவம்பர் 28ஆம் தேதி சென்னையில் மிகப்பிரமாண்டமாக திருமணம் நடந்துள்ளது.

இவரது திருமணத்தில், சன் டிவி சீரியல் திரை உலகை சேர்ந்த பலர் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். மேலும் தன்னுடைய திருமண புகைப்படத்தை தமிழ் செல்வன் வெளியிட, பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *