
பாட்டாளி மக்கள் கட்சியை நிறுவிய மருத்துவர் ராமதாஸ் அவரது மகன் மருத்துவர் அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே நடைபெற்று வரும் மோதலில் சமரசம் என்பதற்கு வாய்ப்பு இல்லை என்கிறார்கள். இந்த நிலையில் அன்புமணி தரப்பில் பாட்டாளி மக்கள் கட்சி வலு பெற்று வருவதாக பேசப்படுகிறது. இதில் தற்போது அன்புமணிக்கு வலதுகரமாக அனைத்து வேலைகளையும் முன்னின்று செய்து வருபவர் வழக்கறிஞர் கே பாலு.
இவர்தான் மாம்பழ சின்னத்தை பறிப்பதற்கு அன்புமணிக்கு ஆலோசனை கூறி அது தொடர்பான ரகசிய மனுவையும் தாக்கல் செய்து யாருக்கும் தெரியாமல் மாம்பழ சின்னத்தை தட்டி தூக்கி விட்டார் என்கிறார்கள். தற்பொழுது அன்புமணியின் தளபதியாக வலம் வரும் வழக்கறிஞர் கே பாலு பற்றிய பல பரபரப்பு தகவல்கள் வெளியே கசிந்து உள்ளன.
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் கே பாலு. இவர் தற்பொழுது குடும்பத்துடன் சென்னை அண்ணா நகரில் வசித்து வருகிறார். இவரது வழக்கறிஞர் அலுவலகம் சென்னை பாரிமுனையில் இருக்கிறது. இவரிடம் முக்கிய ஜூனியர் வழக்கறிஞராக பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த இளவரசு என்பவர் செயல்பட்டு வருகிறார்.
பாட்டாளி மக்கள் கட்சியில் மிக நீண்ட காலமாக பயணித்து வரும் வழக்கறிஞர் கே பாலு அந்த கட்சியின் மக்கள் செய்தி தொடர்பாளராக பணியாற்றி வந்தார். இது தவிர பாட்டாளி மக்கள் கட்சியின் ஒரு அங்கமான சட்ட பாதுகாப்பு என்ற அமைப்பின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார் இது தொடர்பாக மாத இதழ் ஒன்றையும் நடத்தி வந்தார்.
தமிழ்நாட்டில் உள்ள நெடுஞ்சாலைகளில் அமைந்திருக்கும் மதுபான கடைகளை அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் வரை சென்று அதில் வெற்றி கண்டவர் வழக்கறிஞர் கே பாலு. நூற்றுக்கணக்கான பொது வழக்குகளில் வெற்றி பெற்ற வழக்கறிஞர் கே பாலு பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து சட்ட விவகாரங்களையும் கவனித்து வந்தவர்.
மருத்துவர் ராமதாசுக்கும் அன்புமணிக்கும் விசுவாசமாக இருந்தவர். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். இதன் பின்னர் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஜெயம் கொண்டம் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
தற்பொழுது மருத்துவர் ராமதாசால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களில் வழக்கறிஞர் கே பாலுவும் ஒருவர் முன்னதாக பாட்டாளி மக்கள் கட்சி பொருளாளர் திலகபாமாவை நீக்கினார் அடுத்த கட்டமாக வழக்கறிஞர் கே பாலுவை கட்சியில் இருந்து நீக்கினார். இந்த சூழ்நிலையில் தற்பொழுது அன்புமணிக்கு ஆதரவாக வழக்கறிஞர் கே பாலு செயல்பட்டு வருகிறார்.
தற்பொழுது அன்புமணி தரப்பில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வரக்கூடிய பிரச்சினைகள் அனைத்தையும் முன் நின்ற கவனித்து வருவது இவர்தான். முதல் கட்டமாக அன்புமணியை கட்சியிலிருந்து நீக்குகிறேன் எனது ராமதாஸ் அறிவித்தபோது பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணிக்கு தான் சொந்தம் எனக்கூறி தேர்தல் கமிஷனிடம் ஆதாரங்களுடன் மனுவை கொடுத்தது . இவர்தான் இதன் மூலம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை அன்புமணி தான் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என தேர்தல் கமிஷன் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இது மட்டுமல்லாமல் முன்னதாகவே ஆலோசனை செய்து பீகார் தேர்தலை மையமாக வைத்து மாம்பழ சின்னத்தை எங்களுக்கு தர வேண்டும். என தேர்தல் கமிஷனிடம் மனு கொடுத்து மாம்பழம் சின்னத்தையும் பெற்றுவிட்டார்கள் . இதோடு மட்டுமல்லாமல் வருகிற தமிழ்நாடு புதுச்சேரி ஆகிய சட்டமன்றத் தேர்தல்களிலும் எங்களுக்கு மாம்பழ சின்னத்தை தர வேண்டும் என மனு செய்து இது தொடர்பாக மாம்பழ சின்னத்தை அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கி விட்டதாக தெரிகிறது.
வழக்கறிஞர் கே பாலு சிறந்த அறிவுத்திறன் உடையவர் அது மட்டுமல்லாமல் கடுமையான உழைப்பாளி சட்ட திட்டங்களை மிக நுணுக்கமாக அறிந்து வைத்திருப்பவர் என்றெல்லாம் பாராட்டுதலுக்குரியவர். தற்பொழுது அன்புமணியை நோக்கி வரும் அம்புகளை எல்லாம் இவர் தான் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகிறார் என்கிறார்கள். இது மட்டுமல்லாமல் கூட்டணி தொடர்பாகவும் தேர்தல் அறிக்கை தயாரிப்பது தொடர்பாகவும் அனைத்து வகையான ஆலோசனைகளையும் வழக்கறிஞர் கே பாலு தான் வழங்கி வருகிறார் என்று சொல்கிறார்கள்.
கிட்டத்தட்ட அன்புமணியின் தளபதியாகிவிட்ட நிலையில் அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு விரைவில் வழங்கப்படும் என்றும் தெரிகிறது. .தற்பொழுது அன்பு மனைவி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி தொடர்பாக அறிக்கைகள் மற்றும் பேட்டிகள் அனைத்தையும் வழக்கறிஞர் பாலு தான் தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே சமயத்தில் ராமதாஸ் தரப்பில் அனைத்து விஷயங்களிலும் மிகப்பெரிய பின்னடைவுகளை சந்தித்து வருகிறார்கள். தற்பொழுது அவருக்கு சரியான ஆலோசனை சொல்லவும் செயல் திட்டங்களை வகுக்கவும் யாரும் உடன் இல்லாத சூழ்நிலை இருக்கிறது.
வழக்கறிஞர் கே பாலுவை கட்சியை விட்டு நீக்கி இருக்கக் கூடாது என்று மருத்துவர் ராமதாஸிடம் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதே சமயம் அன்புமணிக்கு ஆதரவாக செயல்படும் வழக்கறிஞர் பாலுவை எப்படி கட்சிக்குள் வைத்திருக்க முடியும் என்று ராமதாஸ் கேள்வி கேட்டு வருகிறார்.
இதற்கிடையே அய்யா பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரில் புதிய கட்சி தொடங்குவதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இதன் நிமித்தமாக வன்னியர் சங்க நிர்வாகிகள் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளை அழைத்து ராமதாஸ் ஆலோசனைகள் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


